விளையாட்டுத்துறை சட்டத்தை மறுசீரமைக்க ஆறுமாத காலப்பகுதிகள் புதிய சட்டம் – அமைச்சர் நாமல் ஆராய்வு!
Friday, September 4th, 20201973 ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தை மறுசீரமைப்பது விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நீதி அமைச்சில் நடைபெற்றது.
ஆறுமாதக் காலப்பகுதிகள் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கும் முதல் மாதத்தில் விளையாட்டு அதிகாரிகள் அதற்கான எண்ணக்கருக்களை உருவாக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இரண்டு அமைச்சுகளினதும் அதிகாரிகளால் இவ்வாறு உருவாக்கப்படும் எண்ணக்கருக்கள் தொடர்பில் இரண்டு மாதங்களின் பின்னர் கலந்துரையாடல்கள் நடத்தி கூட்டு அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக இத் திருத்தச் சட்டத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் நீதி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அநுராத விஜேகோன் உட்பட் துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|