விளக்கமறியலில் உள்ள மூவரும் உயர்தரப் பரீட்சை எழுத அனுமதி!

Thursday, August 9th, 2018

வாள்வெட்டுக் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்றும் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்றும் குற்றஞ்சாட்டி விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த மூன்று பேர் ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற மல்லாகம் நீதிமன்று அனுமதியளித்தது.

சிறைச்சாலை அத்தியட்சகரின் கண்காணிப்பில் அவர்கள் மூவரும் பரீட்சை எழுதுவதற்குச் சென்றுவர நீதிமன்று அனுமதி வழங்கியது.

கடந்த சனிக்கிழமை மானிப்பாய் பொலிஸார் நடத்திய தேடுதலில் சாவகச்சேரி, சரசாலை மற்றும் மறவன்புலவு பகுதிகளைச் சேர்ந்த 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 4 வாள்கள், செயின்கள் உட்படக் கூரிய ஆயுதங்கள் சிலவும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.அவர்களில் 3 பேர் இந்த வருடம் நடைபெற்று வருகின்ற உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள்.

10 பேரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் பரீட்சைக்குத் தோற்றவேண்டியவர்கள். அது பற்றி நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன்படி அனுமதி வழங்கப்பட்டது.

Related posts: