விரைவில் 460 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும்-அமைச்சர்  டி.எம்.சுவாமிநாதன்!

Tuesday, August 23rd, 2016

வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள 460 ஏக்கர் நிலம் முதற்கட்டமாக மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர்  டி.எம்.சுவாமிநாதன்  உறுதியளித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டுக்கு நேற்றுத் திங்கட்கிழமை(22) விஐயம் மேற்கொண்டிருந்த அமைச்சரிடம் வலி வடக்கு மீள்குடியேற்ற நிலமைகள் தொடர்பாகக்  கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் 1500 ஏக்கர் நிலத்தை மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சு அமைச்சரவை ஊடாகக் கேட்டிருந்தது.இந்த நிலையில் முதற்கட்டமாக 460 ஏக்கர் நிலத்தை விடுவிக்க இராணுவத்தினர் இணங்கியுள்ளனர் என்றார்.

Related posts: