விரைவில் வடக்கில் 110 மருத்துவர்கள் நியமனம்!

Sunday, December 10th, 2017

வடக்கு மாகாணத்தில் நிரந்தர மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகளுக்காக 110 மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று மாகாண சுகாதார அமைச்சின் செயலர் எஸ்.திருவாரகன் தெரிவித்துள்ளார்’

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது – வடக்கு மாகாண மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை நீண்டகாலமாக நிலவுகின்றது. அத்துடன் நிரந்தரமான மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகளும் உள்ளன.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு கொழும்பு அமைச்சே நியமனங்கள் வழங்கவேண்டும். அந்த வகையில் இந்த முறை எமக்கு 110 மருத்துவர்கள் வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள் இல்லாத மருத்து வமனைக்கு  நியமனம் செய்யப்படுவார்கள் என்றார்.

Related posts: