விரைவில் பண்ணை சுற்றுலாக் கடற்கரை விஸ்தரிப்பு பணிகள் ஆரம்பம்!

நகர அபிவிருத்தி அதிகார சபையின் 50 மில்லியன் ரூபா செலவில் பண்ணை உல்லாசக் கடற்கரைப் பகுதி விஸ்தரிப்பு பணிகள் இடம்பெறவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வை.எ.ஜ.கே.குணதிலக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் தமது நேரத்தை பிரயோசனமாகவும் இலகுநடைப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் வசதியாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் 18 மில்லியன் ரூபா செலவில் பண்ணையில் உல்லாசக் கடற்கரை அமைக்கப்பட்டு யாழ்.மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கடற்கரையின் ஒரு கிலோமீற்றர் நீளமான நடைபாதை மற்றும் ஓய்வு இருக்கைகள் என்பன அமைக்கப்படவுள்ளன. இதனூடாக மக்கள் குறித்த உல்லாசக் கடற்கரையினை பிரயோசனமுள்ளதாகப் பயன்படுத்த வழியேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பூரண தடுப்பூசி ஏற்றியிருக்க வேண்டும் என்ற நடைமுறை ஏப்ரல் 30 க்கு பின்னர் அமுல் - சுகாதார சேவைகள் பணி...
வழமைக்கு திரும்பியது குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள்!
சி.டி.விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவு - புதிய பொலிஸ்மா அதிபரை ...
|
|