விரைவில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு மூடப்படும்?

Tuesday, May 31st, 2016

நிதி மோசடி விசாரணைப் பிரிவு  விரைவில் மூடப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதி மோசடி விசாரணைப் பிரிவின் சிவில் உறுப்பினர்களின் அடையாள அட்டைகள் ஏப்ரல் 8 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இவர்களது அடையாள அட்டையின் நீடிப்பு காலம் ஜுன் 30  வரை மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவர்களது அடையாள அட்டை நீடிப்புக்காலம் நிறைவுபெறும் பட்சத்தில் இவர்களது சேவை நடவடிக்கைகளை முன்னெடுப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

குறித்த சிவில் அதிகாரிகளே நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு மக்களிடமிருந்து கிடைக்க பெரும்  ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைசெய்து  பொலிஸ் மா அதிபருக்கு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்கின்றனர்.

இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட 70 விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: