விரைவில் தூய்மையான ஆட்சி – ஜனாதிபதி !
Monday, August 7th, 2017
கடந்த ஆட்சியைப்போன்று சமகாலத்திலும் தூய்மையற்ற நிலையில் காணப்படுவதனால் விரைவில் அரசாங்கத்தை சுத்தப்படுத்தி தூய்மையான ஆட்சி ஒன்று முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.
தான் அசுத்தமான அரசாங்கத்தில் இருந்து சுத்தமான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கே வெளியே வந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி சிறிது காலத்தினுள்ளேயே இந்த அரசாங்கம் அசுத்தமடைந்துள்ளமை தொடர்பில் வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
எனவே யார் என்ன கூறினாலும், எந்த சவால்கள் வந்தாலும் அரசாங்கத்தை சுத்தப்படுத்தி சுத்தமான ஆட்சி ஒன்றை உருவாக்குவதற்கு தயாராகி உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.அதற்கான அதிகாரம் தன்னிடமே உள்ளமையினால் தனக்கு அவசியமான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|