வியாழக்கிழமையுடன் விண்ணப்பங்களை ஏற்கும் பணி நிறைவு!

Tuesday, June 13th, 2017

2017 அரச சிறுவர் நாடக விழாவிற்கான தயாரிப்புக்களை பொறுப்பேற்கும் பணி எதிர்வரும் வியாழக்கிழமையுடன் (15) நிறைவுபெறுகின்றது.

இதுதொடர்பாக கலாச்சார அலுவல்கள் பணிப்பாளர் அனுசா கோகுல பெணான்டோ தகவல் தருகையில் தமிழ் சிங்கள ஆங்கில மொழிகளில் வரையறுக்கப்பட்ட பகிரங்க மொழிகளில் சிறுவர் நாடக விழா நடைபெறுவதாக தெரிவித்தார்.

கலாச்சார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து அதனுடன் 3 சிறுவர் நாடக பிரதிகளை இணைத்து பதிவுத்தபால் மூலம் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.அனுப்பவேண்டிய முகவரி : நாடக வளர்ச்சி பிரிவு , கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் 8வது மாடி , செற்சிறிபய பத்தரமுல்ல என்ற முகவரிக்க அனுப்பிவைக்கப்படல்வேண்டும்.

அரச சிறுவர் நாடக விழாவிற்கான விண்ணப்பப்படிவம் கலாச்சார அலுவல்கள் திணைக்கள இணையத்தளத்தில் [ www.culturaldept.gov.lk ]தரவிறக்கம் கொள்ளலாம். அல்லது நாடுமுழுவதிலுமுள்ள பிரதேச மட்டத்திலுள்ள கலாச்சார பிரிவுகளில் இதனை பெற்றுக்கொள்ளமுடியும்.கலாச்சார அலுவல்கள் வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் அமைச்சின் கீழ் கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் அரச நாடக சபையும் சேர்ந்து இந்த விழாவை ஏற்பாடுசெய்துள்ளது.

Related posts: