விமான நிலையத்துக்கு அண்மையில் உள்ள காணிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு?

Monday, April 17th, 2017

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்துள்ள இரண்டு காணிகளை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள்  வெளியாகியுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்து ஐந்து நட்சத்திர விடுதிகளை நிர்மாணிக்கும் நோக்கிலேயே இந்த காணிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தனியார் நிறுவனங்களுக்கே இந்த காணிகள் வழங்கப்படவுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சொந்தமான இரண்டு காணிகளை 40 வருட குத்தகைக்க வழங்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமையவே இந்த இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: