விபத்தில் சிக்கி யாழ் மக்கள் வங்கி கிளை உதவி முகாமையாளர் பரிதாப பலி!

யாழ்ப்பாணம், நல்லூர் வீரமாகாளி அம்மன் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் நல்லூரில் வசிப்பவருமான 39 வயதுடைய சிறிஸ்கந்தராஜா பகீரதன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதேவேளை நேற்றிரவு மின்தடைப்பட்டிருந்த வேளையில் விபத்து இடம்பெற்றதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொக்கேய்ன் வர்த்தகர்களால் சீனி இறக்குமதி பாதிப்பு!
அரசாங்கம் ஆயத்தமாக இருக்கவில்லை என குற்றச்சாட்டு!
இணைய பாதுகாப்பு தொடர்பான சட்ட வரைவு அமைச்சரவை அனுமதிக்கு!
|
|