விபத்தில் குடும்பத் தலைவர் படுகாயம்!

Tuesday, January 31st, 2017

ரெயர் வெடித்தால் திடீரென சாலையை விட்டு விலகிச் சென்ற கார், அதே திசையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பணித்த குடும்பத் தலைவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் கேரதீவு சங்குபிட்டிப் பாலத்தில் இடம்பெற்றது.

மன்னார் நானாட்டானைச் சேர்ந்த செல்வராசா (வயது-37) என்பவரே படுகாயமடைந்தார். அவரின் கால் மீது கார்ச் சில்லு ஏறியதால் கால் முறிந்ததுடன் கால் தசையம் சிதைவடைந்தன. சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

201611121125320865_Chinnasalem-near-accident-2-people-death_SECVPF

Related posts: