விபத்தில் காயமடைந்த ஆசிரியை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்!

Wednesday, November 30th, 2016

மன்னார் முருங்கன் வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

மன்னார் முருங்கனைச் சேர்ந்த மகேஸ்வரன் சோதிமலர் (வயது-55) என்ற ஆசிரியையே உயிரிழந்தவராவார். சம்பவ தினத்தன்று காலை மேற்படி ஆசிரியை வீட்டில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்த போது பிரதான வீதியில் வைத்து வான் ஒன்று மோதித்தள்ளியது. இதில் படுகாயமடைந்த அவர், முருங்கன் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் அனுமதிக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். உடற்கூற்று பரிசோதனையின் பின் நடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

eb5e9c5929aa900402249de939abcf26

Related posts: