விபத்தில் இளைஞன் பரிதாபமாக பலி!

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயது இளைஞர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வேலை செய்யும் இடத்தில் காயமடைந்த நபருக்கு உதவும் நோக்கில் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்ற போது, பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துடன் குறித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பொன்னையா விஜயேந்திரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
|
|