விபத்தின் மூலம் காயம் ஏற்படுத்தியவருக்கு நஷ்டஈடு!

கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்தின் மூலம் ஒருவருக்கு காயம் ஏற்படுத்தியவருக்கு 6ஆயிரம் ரூபா அபராதம் விதித்த சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடாக 40ஆயிரம் வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பான வழக்கு சாவகச்சேரி போக்குவரத்து பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு விசாரணை புதன்கிழமை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது விபத்தினை தடுக்கத் தவறியமைக்கு 3ஆயிரம் ரூபாவும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியகுற்றத்திற்கு 3ஆயிரம் ரூபாவும் அபராதமாக செலுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் இருந்து நீதிமன்றிற்கு வருகை தந்திருந்தார். அவர் கோரியதற்கு அமைவாக 40ஆயிரம் ரூபாவை நட்டஈடுத் தொகையாகச் செலுத்துமாறும் உத்தரவிட்டார்.
Related posts:
|
|