விபத்தின்போது உதவி செய்யத ஓட்டோ சாரதிகள் மீது நடவடிக்கை!

ஓட்டோ தரிப்பிடத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் காயப்பட்டவருக்கு உதவி செய்யாத ஓட்டோ சாரதிகள் மூவர் மீது யாழ்.மாவட்ட ஓட்டோ உரிமையாளர் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அதன் செயலாளர் சி.கிரிதரன் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் பரமேஸ்வராச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்தார். விபத்து நடைபெற்ற இடத்திற்கு அண்மையாக ஓட்டோ தரிப்பிடம் ஒன்று உள்ளது. அங்கு தரித்து நின்ற மூன்று ஓட்டோக்களின் சாரதிகளில் எவரும் விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்வரவில்லை என மறுநாள் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. அதுகுறித்து ஓட்டோ உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. குறித்த ஓட்டோ சாரதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாரதிகள் மூவருக்கும் மூன்று நாட்கள் தற்காலிகமாக சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளனர். விபத்து நடைபெற்ற பிரதேசத்தில் அனுமதியின்றி ஓட்டோக்கள் தனித்து நின்றன என்றும், அதனால் தாம் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றோம் என்றும் ஓட்டோ சாரதிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட சாரதிகளுக்கு அறிவுறுத்தியும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் – என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|