வினைத்திறனற்ற வடக்கு மாகாண சபையின் பயனற்ற மருதம் மரங்களின் மாதிரி பூங்கா – பல இலட்சம் ரூபா வீண் விரயம் என மக்கள் விரயம்!

பல இலட்சம் ரூபா செலவில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட மருதம் மரங்களின் மாதிரிப் பூங்காவுக்கான பொருத்தமற்ற இடத்தெரிவால் ஒரு மாதத்துக்குள் அழிவடைந்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சின் மரநடுகை செயற்றிட்டம் ஊடாக கிளிநொச்சியில் இம் மாதம் 1ஆம் திகதி மரதம் மரங்களின் பூங்காவுக்காக ஆரம்பித்து பல லட்சம் ரூபாவில் மரநடுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பூங்கா கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திக்கருகில் உள்ள இரணைமடு இடது கரை வாய்க்காலின் அருகில் காணப்படுகின்ற ஒதுக்கீட்டு நிலத்தில் 1ஆம் திகதி இடம்பெற்றது. பிரமாண்டமாக ஒழுங்கு செய்யப்பட்ட பல லட்சங்கள் செலவு செய்து அமைக்கப்பட்ட இப்பூங்கா தற்போது பெய்த மழைக் காரணமாக அந்த இடம் சிறு குளம் போன்று காட்சி அளிப்பதோடு நாட்டப்பட்ட மரங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
மருதம் மரங்களின் மாதிரி பூங்காவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இடம் பள்ளத் தரையாகையால் குளம் போன்று நீர்த் தேங்கி காணப்படும் நிலையில் குறித்த நீர் வற்றுவதற்கு பலமாதங்கள் செய்லும் என்று குறிப்பிடும் மக்கள் மழைக்காலத்தில் மரம் நடுவதற்காக மாகாண சபையால் தெரிவு செய்யப்பட்ட இந்த இடம் பொருத்தமற்றது என்றும் தெரிவிக்கின்றனர். மருத மரங்களின் மாதிரி பூங’கா உருவாக்கும் வழகயில் மருதம் எனும் பெயரில் குறித்த இடம் தெரிவு செய்யப்பட்டது. ஆனால் தெரிவு செய்யப்பட்ட இடம் பொருத்தமற்றது என்றும் அதில் மரங்களை நாட்டி வளர்க்கும் காலம் இதுவல்ல எனவம் தெரிவிக்கும் பிரதேச மக்கள் இதற்காக செலவு செய்த பல லட்சம் ரூபா வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
|
|