வித்தியா கொலை வழக்கு – பூபாலசிங்கம் இந்திரகுமார் மீண்டும் விளக்கமறியலில்!

Friday, March 23rd, 2018

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பிரதேசத்தில் மாணவி வித்தியா  கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 28 ஆம் திகதி வரை குறித்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காவற்துறை அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதவான் இவ்வாறு உத்தரவுபிறப்பித்துள்ளார்.

Related posts: