வித்தியாவின் தாயாரை மிரட்டியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Monday, July 25th, 2016


மாணவி வித்தியாவின் தாயாரை மிரட்டிய சந்தேகநபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி .எம்.எம்.றியால் உத்தரவு இட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு விசாரணை இன்றையதினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் .எம்.எம்.றியால் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது குறித்த குற்றத்தை புரிந்தார் எனும் சந்தேகத்தில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் மன்றில் முன்னிலைப்படுத்தப் பட்டார். 

அதனை தொடர்ந்து சந்தேக நபரை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார். குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தவேளை  மகாலிங்கம் தவநிதி என்பவர் கடந்த 17ஆம் திகதி யாழ்ப்பாண சிறைசாலையில் மரணமடைந்து இருந்தார். 

மரணமடைந்தவர் புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள நான்காம் சந்தேக நபரான மகாலிங்கம் சசீந்திரன் மற்றும் ஒன்பதாம் சந்தேக நபரான சுவிஸ் குமார் என அழைக்கபடும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோரின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: