விண்ணப்பம் கோரல்!

Friday, December 30th, 2016

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படவுள்ள சட்டமாணிப்பட்டப் படிப்புக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் சட்டக் கற்கை திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற சட்டமாணிப்பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்ட நுழைவுக்கான விண்ணப்பபடிவங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரைப் பெற்றுக்கொள்ள முடியும்.                            இச் சட்டமாணிப்பட்டப் படிப்பு நுழைவுப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 18 வயதிற்கு மேற்பட்ட திறந்த பல்கலைக்கழகத்தின் ஏதேனும் அடிப்டைக் கற்கையின் மட்டம் 1 மற்றும் 2இணைப்பு பூர்த்தி செய்திருப்பின் அல்லது க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 4 பாடங்களிலும் சித்தி அவற்றில் 3 பாடங்களிற்கான சித்தி ஒரே அமர்வில் பெறப்பட்டிருப்பின் அல்லது க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி அல்லது சிறந்த பல்கலைக்கழகத்தின் செனற் சபையினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய இதற்கு சமமான அல்லது மேலான தகுதிகள் அல்லது சட்டத்தரணியாக இருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

இதற்குரிய தெரிவுப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்குரிய விண்ணப்பத்தினையும் இது தொடர்பான மேலதிக விபரங்களையும் அருகில் உள்ள  இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய மற்றும் கற்கை நிலையங்களில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

application

Related posts: