விஜயதாசவிற்கு ஆதரவாக வாக்களிக்கும் கூட்டு எதிர்க்கட்சி!

உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு எதிராகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு ஆதரவாகவும் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்புக்களின் போது வாக்களிக்க உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
பைசர் முஸ்தபா மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான ஓர் நிலையில் விஜயதாச ராஜபக்சவிற்கு ஆதரவாகவும் பைசர் முஸ்தபாவிற்கு எதிராகவும் செயற்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாம் விஜயதாச ராஜபக்சவிற்கு ஆதரவளிப்போம். விஜயதாச ராஜபக்சவே அதிகளவில் மஹிந்த ராஜபக்சவை விமர்சனம் செய்தார்.கொள்கை அடிப்படையில் அன்று மஹிந்த அரசாங்கத்தை விட்டு விஜயதாச விலகியிருந்தார். விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக அரசாங்கம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சிப்பதற்கான காரணம் அவரது கொள்கைகளாகும்.
விஜயதாச ராஜபக்சவின் கொள்கைகளை நாம் மதிக்கின்றோம். எனினும் பைசர் முஸ்தபாவின் செயற்பாடுகளை நாம் எதிர்க்கின்றோம். பைசர் முஸ்தபாவிற்கு எதிராக ஆளும் கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் நாம் ஆளும் கட்சியினருடன் இணைந்து பைசருக்கு எதிராக வாக்களிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|