விச ஜந்துக்களின் தாக்கத்தால் 10 பேர் வைத்தியசாலையில்!

Thursday, August 9th, 2018

தென்மராட்சிப் பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்குள் பத்துப்பேர் விச ஜந்துக்களின் தாக்கத்திற்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் மிருசுவிலைச் சேர்ந்த செபனேசன் பிரியா (வயது 37) சாவகச்சேரியைச் சேர்ந்த ச.சத்தியானந்தன் (வயது 38) ஆகியோர் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையிலும் கச்சாய் வீதி சாவகச்சேரியைச் சேர்ந்த ஜெ.கப்ரில் (வயது 27) வெள்ளைப்பூரான் கடிக்கு இலக்கான நிலையிலும் சாவகச்சேரியைச் சேர்ந்த சி.பாஸ்கரசிங்கம் (வயது 60) தேள் கடிக்கு இலக்கான நிலையிலும் மீசாலையைச் சேர்ந்த ச.விகர்னன் (வயது 38), கொடிகாமத்தைச் சேர்ந்த வி.கலையரசி (வயது 33), மிருசுவிலைச் சேர்ந்த பொ.சிவராசா (வயது 52), நுணாவிலைச் சேர்ந்த வி.துஸ்யந்தன் (வயது 30), மீசாலையைச் சேர்ந்த ஆ.டினுக்சன் ( வயது 9) மட்டுவிலைச் சேர்ந்த சி.தனுசா (வயது 2) ஆகியோர் இனந்தெரியாத விச ஜந்துக்களின் தாக்கத்திற்கு இலக்கான நிலையிலும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts: