விசாரணை நிறைவடையும்வரை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குங்கள் – கடற்படைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, June 8th, 2021

அண்மையில் இலங்கை கடற்பரலப்பில் அனர்த்தத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பான விசாரணை நிறைவடையும்வரை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை கப்பல் கடலில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கப்பலின் வீடியோ தரவு பதிவகத்தையும் விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களம் பெற்றுள்ளது. இந்த விசாரணை நிறைவடையும்வரை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த கப்பல் தீ விபத்துக்கு உள்ளாகி கடலுக்குள் மூழ்கியதால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதற்கான இழப்பீடுகளை பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நீதி அமைச்சில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: