வாவியில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு !

Monday, August 1st, 2016

மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் வாவியில் இருந்து சிறுவன் ஒருவரின் சடலம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை (29) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்க்கப்பட்டவர். சிவாஞ்ஞானம் டினோசன் வயது 12 எனும் சிறுவனின் சடலம் என உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் இனங்காட்டியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த சிறுவனின் தந்தை கருத்துத் தெரிவிக்கையில்-

மகன் அண்மைக்காலமாக புத்தி சுயாதீனம் அற்ற நிலையில் வாழ்ந்து வந்தவர்.  இறப்பதற்கு முன்தினம் இரவு காணமல் போயிருந்தார் மறுநாள் பின்னேரம் ஒந்தாச்சிமடம் வாவியில் சிறுவன் ஒருவரின்  சடலமாக மீட்கப்பட்டள்ளதாக கிராம மக்கள் வாயிலாக அறிந்து வந்து பார்த்தேன் பின்னர் எனது மகனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பதனை  இனங்கண்டு கொண்டேன் எனத் தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: