வாழ்வாதார நீருக்காக உடையார் கட்டில் போராட்டம்!

Tuesday, March 27th, 2018

புதுக்குடியிருப்பு உடையார் கட்டுக் குளத்தில் இராணுவம் நீர் எடுப்பதை தடுக்கக் கோரி அந்தப் பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகம் முன்பாக கூடிய விவசாயிகள் பதாகைகளை ஏந்தியவாறு  ஆர்ப்பாட்டம் செய்தனர் பிரதேச அபிவிருத்திக் கூட்டத் தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் நீர் இயந்திரங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர் தவறினால் சிறுபோகத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினர் .

தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை புதுக்குடியிருப்பு பிரதேச செயலருக்குக் கையளித்தனர்.அதைத் திட்டமிடல் பணிப்பாளர் பெற்றுக் கொண்டார் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிற்கும் மனு கையளிக்கப்பட்டது.

Related posts: