வாழ்க்கைச் செலவு தொடர்பாக அமைச்சரவை உப குழு நியமனம்!

Thursday, August 27th, 2020

வாழ்க்கைச் செலவு தொடர்பாக அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவானது சந்தையில் நிலவும் கோரிக்கை மற்றும் விநியோக ஏற்ற இறக்கங்கள், காலநிலை தாக்கம் பருவகால உற்பத்திகள் தயாரிப்பாளர்களினால் இடம்பெறும் மாற்றம், சர்வதேச சந்தையில் விலைகள் போன்ற விடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வாழ்க்கைச் செலவை நிலையானதாக முன்னெடுப்பதற்கு தேவையான கொள்கை மற்றும் நடைமுறைத்தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதியின் தலைமையிலும் பிரதமர், வர்த்தக, விவசாய, கடற்றொழில், பெருந்தோட்டத்துறை ஆகிய அமைச்சுக்களினது அங்கத்துவத்துடனான வாழ்க்கைச் செலவு தொடர்புடனான அமைச்சரவை துணைக்குழுவை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த துணைக்குழுவின் பணிகளுக்காக கீழ் குறிப்பிடப்பட்ட இராஜாங்க அமைச்சர்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நெல் மற்றும் தானியம் சேதனப் பசளை உற்பத்தி உணவுப்பொருட்கள், மரக்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம் மற்றும் கிழங்கு உற்பத்தி மேம்பாடு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சர், கூட்டுறவு சேவை, விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்,

தெங்கு, கித்துள், பனை மற்றும் இறப்பர் உற்பத்தி அபிவிருத்தி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விவசாய பொருட்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி விரிவாக்க இராஜாங்க அமைச்சர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: