வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை  இனம்காண பொதுமக்களிடம் உதவிகேட்கும் பொலிஸார்!

Tuesday, June 7th, 2016

யாழ்ப்பாணத்தில் கடந்த கால வாள் வெட்டு சம்பவங்கள், ஆட்கடத்தல், கப்பம் கோரல் உள்ளிட்ட பல சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக மூன்று சந்தேக நபர்களை இனங்காட்டி தருமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.

இதன்படி தேவா, சன்னா, பிரகாஸ் என்கின்ற சந்தேக நபர்கள் குறித்து தகவல்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களிற்கு வழங்கி உதவுமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்குறித்த நபர்கள் அனைவரும் இவ்வருடத்தில் யாழ் குடாநாட்டு பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புள்ளதாக பொலிஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தற்போது தலைமறைவாக இருக்கும் சந்தேக நபர்களை கைது செய்வதன் ஊடாக பல சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இச் சந்தேக நபர்கள் தொடர்பான முறைப்பாடுகள் பல , சுன்னாகம், மானிப்பாய் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பாதிக்கப்பட்டவர்களால் பதியப்பட்டுள்ளது.

jaffna01-1 jaffna01-2

Related posts: