வாள்வெட்டுக் குற்றச்சாட்டில் கைதானோருக்கு பிணை மறுப்பு!

Monday, December 5th, 2016

வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக மல்லாகம் நீதிமன்ற நீதிவான் வழங்கிய தீர்ப்பு சரியானதே. ஆகவே சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்க முடியாது என்று யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் அண்டு இணுவில் கிழக்குப் பகுதியில் வாளால் வெட்டிக் காயம் ஏற்படுத்தியமை மற்றும் முச்சக்கர வண்டியை சேதமாக்கியமை தொடர்பாகப் பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைகளில் நீதிவான் 1ஆவது குற்றச்சாட்டு 2 ஆண்டுகள் கடுழியச் சிறத்தண்டனையும் விதித்ததுடன், 3 எதிரிகளும் தலா ஒரு லட்சம் ரூபா தண்டம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தார். இந்த வழக்கின் பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தொடரப்பட்டது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது எனவும், வழங்கப்பட்ட தீர்ப்பானது நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய திகதியில் இருந்த கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் – பிணை வழங்கமுடியாது எனவும் – மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

court-hammer-720x480

Related posts: