வாராந்தம் மூன்று இலட்சம் லீற்றர் ஒட்சிசன் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, August 24th, 2021

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சைகள் வழங்குவதற்காக வாராந்தம் 3 இலட்சம் லீற்றர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா நோயாளர்களுக்காக மாதாந்தம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் லீற்றர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், தற்போது டெல்ட்டா வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்து வருவதன் காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

எனவே இதனைக் கருத்திற்கொண்டு இவ்வாறு ஒட்சிசன் இறக்குமதியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: