வாய்பேச முடியாத பெண்ணை துஷ்பிரயோகம் செய்த நால்வருக்கு 15 ஆண்டு கடூழிய சிறை! -யாழ் நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு!

Wednesday, August 10th, 2016

கைதடிப் பகுதியில் ஊமைப் பெண் ஒருவரை கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திறிகு உட்படுத்திய 4 பேருக்கு யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன் குற்றவாளிகளை தலா 25 ஆயிரம் அபராதமாகவும் தலா 5 லட்சம் ரூபா நட்டஈடாகவும் கொடுக்குமாறும் அவற்றைக் கட்டத்தவறினால் மேலதிகமாக இரண்டரை வருடங்கள் சாதாரண சிறைத்தண்டனை வழங்குமாறும் நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஆடி மாதம் நடைபெற்ற குறித்த சம்பவத்தின் வழக்கு இன்று காலை யாழ் மேல்நீதிமன்றத்தில் நடந்தது. இந்த விசாரணையிலேயே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் குற்றவாளிகள் சார்பில் சட்டத்தரணி சர்மினி வழங்குகளை கொண்டு நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts: