வாய்க்காலில் விழுந்து சிறுவன் பலி – கிளிநொச்சியில் சோகம்!

Tuesday, January 2nd, 2018

கிளிநொச்சி – இரத்தினபுரம் பகுதியில் வாய்க்காலில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயதான ராஜேந்திரகுமார் யுகினேஸ் என்ற சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

காலை குறித்த குழந்தை வீட்டின் முன்பாக உள்ள வாய்க்காலின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே தவறி விழுந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் படி கூறப்படுகின்றது