வாகன விலை குறித்து நிதி அமைச்சர் விளக்கம்!

Wednesday, June 1st, 2016

வாகன விலைத் திருத்தம் குறித்து வாகன நிறுவன சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, முச்சக்கரவண்டிகளுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரவி கருணாநாயக்க தற்போது முச்சக்கர வண்டியின் விலை 10 இலட்சம் ரூபாய் வரையுள்ளதாகவும், அவர்களது வருமானம் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், முச்சக்கர வண்டி சங்கத்தினால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

இதன்படி, பெற்றோலில் ஓடும் முச்சக்கர வண்டிகள் 35,000 ரூபாவாலும், டீசலில் ஓடும் முச்சக்கர வண்டிகள் 70,000 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் சாதாரண மோட்டார் வாகனங்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும், அது இல்லாமல் சொகுசு வாகனங்களுக்கான விலை அதிகரித்துள்ளது, அவற்றை பணம் அதிகம் உள்ளவர்கள் கொள்வனவு செய்வதாலேயே எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: