வாகன விபத்துக்களில் 2800 பேர் பலி!

Thursday, October 27th, 2016

நடப்பு ஆண்டில் வாகன விபத்துக்களினால் இதுவரை 2800 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வழமையாக ஆண்டு ஒன்றில் வாகன விபத்துக்களினால் சுமார் 2500 பேர் உயிரிழப்பதாகவும் இந்த ஆண்டில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வீதி விபத்துக்களினால் பலர் ஊனமுற்ற நிலையை எதிர்நோக்கி வருவதாகவும் விபத்துக்களில் சிக்கும் அதிகளவானவர்கள் 15 முதல் 40 வயது வரையிலானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதிக வேகம் வீதி சமிக்ஞைகளை பின்பற்றாமை, சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனயீனம், செல்லிட பேசியில் பேசிக்கொண்டே வாகனம் செலுத்துதல்,வாகனங்களின் நிலை போன்ற காரணிகளினால் அதிகளவு விபத்து சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

timthumb

Related posts: