வாகனங்களை ஏலத்தில் விட தயாராகும் அரசாங்கம்!

Tuesday, February 11th, 2020

கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 28000 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனங்களை ஏலத்தில் விடவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கிடைக்கும் பணத்தை பொது மக்களின் தேவைக்காக பயன்படுத்த தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 28000 இலட்சம் ரூபாய் செலவிட்டு கடந்த அரசாங்கத்தினால் கொள்வனவு செய்த பல வாகனங்கள் இன்னமும் ஒப்படைக்கப்படக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

அந்த வாகனங்களை அரசாங்கக்திற்கு பெற்றுக் கொள்வதற்காக உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்ன நோக்கத்திற்காக மக்கள் பணத்தை செலவிட்டு வாகனம் கொண்டு வரப்பட்டதென விசாரணை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: