வாகனங்களின் விலை அதிகரிப்பு தொடர்பான விபரம் வெளியானது!

Friday, November 11th, 2016

ஆயிரத்துக்கும் குறைவான எஞ்ஜின் திறன் கொள்ளளவு கொண்ட சிறிய ரக கார்கள், 2 இலட்சம் ‌ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக, வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1,800 முதல் 2,000 எஞ்ஜின் திறன் கொள்ளளவு கொண்ட வாகனங்கள் 9 இலட்சம் ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய மேற்படி இறக்குமதியாளர்கள், இது, ஹைப்ரிட் வாகனங்களில் தாக்கம் செலுத்தப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அனைத்து விதமான வான்களும், இரண்டு இலட்சம் ரூபாயினால் குறைவடையவுள்ளதாகவும். இந்த விலைக் குறைப்பானது, பெட்ரோல் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மாத்திர​மே பொருந்தம் எனவும் வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டீசலில் இயங்கும் வான்களுக்கு, இந்த விலைக்குறைப்பு இல்லை. இதேவேளை, க்ரூ கெப் ரக வாகனங்களின் விலைகளும் குறைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக, வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்தள்ளனர்

3-14.

Related posts:


கொரோனா பரவலுக்கு மத்தியில் நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அனைவரதும் பொறுப்பாகும் – பிரதமர்...
எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து திட்டமிடப்பட்ட மின்தடை குறைக்கப்படலாம் - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...
பேசுவதற்கு முன்வரும் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!