வழக்கு தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் பரிசீலிக்க குழு நியமனம் – உள்நாட்டலுவல்கள் அமைச்சர்!

வழக்கு தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இன்றைய விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். அரச ஊழியர்களுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், 2016 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியமும் அதிகரிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
Related posts:
காற்று மாசடைவதால் வருடாந்தம் சுமார் 70 லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம்!
இன்று முதல் மொழிபெயர்ப்புக் கட்டணங்கள் அதிகரிப்பு!
கடமைக்கு சமுகமளிக்காது வெளிநாடு சென்றுள்ள முப்படையினருக்கு பொதுமனிப்பு - பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்...
|
|