வல்வெட்டித்துறையில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த நபரொருவர் கைது!

Tuesday, March 28th, 2017

யாழ். வல்வெட்டித்துறையில் இரண்டு கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த நபரொருவர் நேற்று (27) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் கடற்படையினரும், மதுவரித் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த போதைப் பொருள் கண்டறியப்பட்டுள்ளது.

யாழிலிருந்து வேறு மாவட்டத்திற்கு ஹெரோயின் போதைப்பொருளினைக்  கடத்திச் செல்ல முற்பட்ட போதே குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts: