வல்லைப் பாலத்தில் சிறிய ரக ஹன்ரர் விபத்து :ஒருவர் படுகாயம்!

20180412_110544 Thursday, April 12th, 2018

யாழ். வடமராட்சி வல்லைப் பாலத்தடியில் சற்றுமுன்னர் சிறியரக ஹன்ரர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் சாரதியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

அச்சுவேலிப் பக்கமாகவிருந்து நெல்லியடிப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறியரக ஹன்ரர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வல்லைப் பாலத்தில் சறுக்கி அருகிலுள்ள கடலுக்குள் பாய்ந்தமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.