வலி. வடக்கு மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில்  விரைவில் பதிலளிக்க வேண்டும்:இல்லையேல் அனைத்துத் தரப்பினரையும் திரட்டிச் சாத்வீ கப் போராட்டம் !

Thursday, June 23rd, 2016

ஜனாதிபதி  வாக்குறுதியளித்த காலக் கெடுவும் முடிவடைகிறது. எனவே, ஜனாதிபதி எமது நிலங்களை  விடுவிப்பார் என எதிர்பார்த்துக் காத்திருந்த வலி.  வடக்கு மக்களுக்கு அவர் எதுவும் கூறாதது ஏமாற்றமே. வலி. வடக்கு மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மிக விரைவில் பதிலளிக்க வேண்டும். இல்லையேல் அனைத்துத் தரப்பினரையும் திரட்டிச் சாத்வீகப் போராட்டமொன்றை விரைவில் அறிவிப்போம் என வலி. வடக்கு மீள்கு டியேற்றப் புனர்வாழ்வுச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொஸ்கமவில் துரிதமாக இடம்பெறும் மீள்குடியேற்றமும், புனர் நிர்மாணமும் அந்த மக்களுக்கான உதவிகளும், வலி. வடக்கிலிருந்து 26 வருடங்களாக நலன்புரி முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, நலன்புரி நிலையங்களின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பொது அமைப்புக்கள், மீனவர் சங்கங்கள், ஊடகங்கள் என்பவற்றின் ஆதரவுடன் மிக விரைவில் சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தென்னிலங்கையின் ஆதரவையும் கோரவுள்ளோம். எமது போராடடத்திற்கு முன்னதாக ஜனாதிபதி எமது மக்களின் காணிகளை விடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: