வலி. வடக்கில் வெள்ளி, ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்குத் தடை!

Tuesday, May 8th, 2018

வலி. வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் முழுமையாகவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12 மணி வரையும் தரம் 09 வரையான வகுப்புக்களை நடத்தக்கூடாது என வலி. வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

அறநெறிப் பாடசாலைகள் இயங்குவதற்கும் இப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கும் ஏதுவாக தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்களை நடத்துவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஏற்கனவே இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் சில தனியார் கல்வி நிலையங்கள் இதனை கவனத்தில் கொள்ளாது செயற்படுவதாகவும் இதனால் இச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: