வலி வடக்கில் மீள குடியமர்ந்த மக்களுக்கான கடற்தொழில் உபகரணங்கள் மீளக்குடியேற்ற அமைச்சால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் இவ் உதவித் திட்டங்களை வழங்கி வைத்தார்.
வலி வடக்கில் மீளக் குடியமர்ந்த மக்களில் கடற்தொழில் செய்யும் தெரிவு செய்யப்பட்ட 46 பேருக்கு வலைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார திட்டத்தில் முதல் கட்டமாக 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இவ் வலைகள் வழங்கப்பட்டுள்ளன.
Related posts:
அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கலைப்பிரிவு ஆரம்பம்!
பாகிஸ்தானில் கோர விபத்து - 36 பேர் பலி!
மக்களை சோகத்தில் ஆழ்த்திய நடுங்கமுவ ராசா!
|
|