வலி. கிழக்கு விவசாய காணிகளில் பாதீனியச் செடி பரம்பல்!

Tuesday, December 19th, 2017

வலி.கிழக்குப் பிரதேசத்தில் பாதீனியச் செடிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளன. குறிப்பாக கோப்பாய், நீர்வேலி பிரதேசங்களில் இந்த பாதீனிய செடிகளின் பெருக்கம் அதிகளவில் காணப்படுகின்றன.

மாரி மழை பெய்ததை அடுத்து இந்த பாதீனிய செடிப் பரம்பல் விவசாய தோட்டங்களை ஆக்கிரமித்து காணப்படுகின்றன.

இந்நிலையில் இப் பாதீனியங்களை ஆரம்பத்திலேயே பிடுங்கி அழிப்பதில் விவசாயிகள் சிலர் மும்முரமாக ஈடுபட்டும் வருகின்றனர். அதனை விட பொதுமக்களின் குடியிருப்பு சுற்றாடல் மற்றும் மக்கள் குடியிருப்பு வெற்றுக் காணிகளிலும் இப் பாதீனியங்கள் பெருமளவில் முளைத்தும் காணப்படுகின்றன.

Related posts: