வலி.கிழக்கில் திருட்டுகள் அதிகரிப்பு!

Saturday, November 5th, 2016

கோப்பாய், நீர்வேலிப் பிரதேசங்களில் பட்டப்பகல் திருட்டுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துக் காணப்படுகின்றன. வீட்டுக்காரர் வீட்டில் இல்லாததைப் பயன்படுத்தி திருடர்கள் வீட்டுக்குள் சென்று திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோப்பாய் பூதர் மடத்தடியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் ஒன்றைத் திருடர்கள் கடந்த புதன்கிழமை களவாடிச் சென்றனர். அத்துடன் கோப்பாய்ச் சந்திக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் இருந்த தண்ணீர் இறைக்கும் மோட்டர் இயந்திரம் ஒன்றையும் திருடர்கள் களவாடியுள்ளனர். கோப்பாய் இராச வீதியில் உள்ள வீடு ஒன்றில் கட்டி நின்ற ஆட்டுக்கடா ஒன்றும் திருடர்களால் களவாடிச் செல்லப்பட்டுள்ளது. இதேவேளை, நீர்வேலி மேற்குப் பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் ஒன்றில் இருந்து கடந்த வாரம் 10ற்கும் மேற்பட்ட வாழைக்குலைகள் திருடர்களால் வெட்டிச் செல்லப்பட்டுள்ளன. திருடர்களின் திருட்டுச் சம்பவங்கள் இந்தப் பகுதியில் தற்போது அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் இரவு வேளையில் பீதியுற்றுக் காணப்படுகின்றனர்.

914140273Rob

Related posts: