வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் இடம் மாற்றம்!

Wednesday, December 14th, 2016

வலிகாமம் கல்வி வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய த.சந்திரராஜா நாளை வியாழக்கிழமை முதல் வடமாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக (அபிவிருத்தி) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சந்திரராஜா மீது பல முறை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அண்மையில் வலிகாமம் கல்வி வலயத்தில், வாகனம் நிறுத்தும் இடத்தில் வலிகாமம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் தனது சொந்த வாகனத்தை நிறுத்தியிருந்த வேளை வலிகாம வலயக் கல்வி அலுவலக சாரதி அவருடன் தர்க்கம் புரிந்தார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சால் விசாரணையை நடத்துவதற்கக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழுவால் விசாரணைகளும் இடம்பெற்றன. சந்திரராஜா மீது பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் பிரகாரம் விசாரணையின் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது வடமாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக (அபிவிருத்தி) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் இவருக்குப் பதிலாக வடமாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக (அபிவிருத்தி) கடமையாற்றிய திருமதி.செல்வின் நாளை வியாழக்கிழமை தொடக்கம் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளராக தனது கடமைய பெறுப்பேற்கவுள்ளார் – என்றார்.

transfer-720x480

Related posts: