வலிகாமம் மேற்கில் புகையிலை செய்கைக்கு வருகிறது தடை!

Monday, April 3rd, 2017

2020 இல் போதையற்ற நாடாக இலங்கையை மாற்ற அனைவரும் துடிப்புடன் இயங்கும் போது வலி. மேற்கில் புகையிலை உற்பத்தி செய்கைக்கு அனுமதியளிக்க மாட்டேனென வலி. மேற்கு பிரதேச செயலர், சோதிநாதன் தெரிவித்துள்ளார்.

எனவே விவசாயிகள் உணர்ந்து சமூகத்தின் நன்மை கருதி மாற்று உற்பத்தியில் ஈடுபட வேண்டும் எனவம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

குறிப்பிட்ட சில விவசாயிகள் சமூகத்திற்கு தீங்கான போதையை உருவாக்கும் புகையிலை உற்பத்திகளில் ஈடுபடுகின்றனர். வருமானத்தை ஈட்டி பணக்காரராக ருவதற்காக இச் செய்கையை மேற்கொள்கின்றனர்.

எனவே புகையிலை செய்கையை மேற்கொண்டவர்கள் அதனை கைவிட்டு பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் வலுவூட்டுகின்ற உற்பத்திகளில் ஈடுபட்டு நல்லதொரு விவசாயிகளாக மாறுமாறு கோருகின்றேன். அத்துடன் புகையிலை உற்பத்திக்காக அதிகரித்த யூரியா, கிருமிநாசினி, பிரயோகம் என்பனவற்றால் சூழலும் நிலத்தடி நீரும் அபாயகரமானதாக மாறுகிறது. இதனால் புகையிலை உற்பத்தியை வலி. மேற்கில் தடை செய்துள்ளேன் என்றார்.

Related posts:


சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றினால் ஆர்ப்பாட்டங்களை தடுக்க முடியாது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெர...
புலமைப்பரிசில் - உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் எதிர்வரும் தினங்களில் முக்கிய தீர்மானம் - கல்வி அமைச்...
பசுமை விவசாயத்துக்கு செயற்பாட்டு மையம் - இராணுவத் தளபதியின் தலைமையில் ஸ்தாபிக்க ஜனாதிபதி கோட்டாபய ரா...