வலிகாமம் பகுதியில் மழையுடன் வீசிய பலத்த காற்று: வாழைச் செய்கையாளர்கள் பாதிப்பு!

யாழ். வலிகாமம் பகுதியில் நேற்று முன்தினமும், நேற்றும் மழையுடன் வீசிய பலத்த காற்றுக் காரணமாக வாழைகள் பெருமளவில் குலைகளுடன் முறிந்து விழுந்துள்ளன.
இதன் காரணமாக வாழைத் தோட்டச் செய்கையாளர்கள் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
வலிகாமம் பகுதியில் சுன்னாகம், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, அச்செழு, குப்பிளான், நீர்வேலி, கோப்பாய், ஊரெழு உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் நிலப் பகுதியில் விவசாயிகள் வாழைச் செய்கை மேற்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
மேல் மாகாணத்திற்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு - ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட 68 பொலிஸ் ...
சுபகிருது புத்தாண்டு மலர்ந்தது - புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை ...
எவருக்கும் மானிய விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவது இல்லை - அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
|
|