வலிகாமம் பகுதியில் சிறுபோக வெங்காயச் செய்கை மும்முரம்

வலிகாமம் பகுதியில் சிறுபோக வெங்காயச் செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏழாலை, குப்பிளான், குரும்பசிட்டி, வசாவிளான், ஈவினை, புன்னாலைக் கட்டுவன்,மயிலங்காடு, சூராவத்தை, சுன்னாகம், மருதனார்மடம், இணுவில்,உடுவில், தெல்லிப்பழை, கட்டுவன் ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் பல நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலப் பகுதியில் வெங்காயச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மே மாத நடுப் பகுதியில் யாழ். குடாநாட்டில் இரண்டு நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்த அடை மழை காரணமாக வெள்ளம் தேங்கி நின்று வெங்காயப் பயிர்கள் அழிவடைந்தன. இதனால், வலிகாமம் பகுதி விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது.
இந்த நிலையில் வெங்காயம் அழிவடைந்த நிலப் பகுதி விவசாயிகள் மீண்டும் வெங்காயச் செய்கை மேற்கொண்டு வருவதுடன் புதிதாகவும் விவசாயிகள் வெங்காயப் பயிர் நடுகை செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|