வலிகாமம் பகுதியில் சிறுபோக வெங்காயச் செய்கை அறுவடை ஆரம்பம் !

Saturday, July 23rd, 2016

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் சிறுபோக வெங்காயச் செய்கை அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. இவ் வருடம் சிறுபோக வெங்காயச் செய்கையில் வலிகாமத்தில் அதிகளவு விவசாயிகள் ஆர்வம் காட்டியிருந்தனர்.

ஏழாலை, குப்பிளான், குரும்பசிட்டி, வசாவிளான், ஈவினை, புன்னாலைக் கட்டுவன், மயிலங்காடு, சூராவத்தை, சுன்னாகம், மருதனார்மடம், இணுவில்,உடுவில், தெல்லிப்பழை, கட்டுவன், அளவெட்டி, மல்லாகம், ஊரெழு, உரும்பிராய், நீர்வேலி, இருபாலை, கோப்பாய்,கோண்டாவில், புத்தூர்,நவக்கிரி, சிறுப்பிட்டி ஆகிய   பகுதிகளிலுள்ள விவசாயிகள் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப் பகுதியில் வெங்காயச் செய்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் வெங்காய அறுவடை தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகிறது.

இந்த வருடம் வலிகாமம் பகுதியில் அதிகளவு நிலப்பரப்பில் வெங்காயம் பயிரிடப்பட்ட காரணத்தால் யாழ். மாவட்டத்திலுள்ள முக்கிய சந்தைகளான திருநெல்வேலி பொதுச் சந்தை, மருதனார்மடம் பொதுச் சந்தை, சுன்னாகம் பொதுச் சந்தை உட்பட ஏனைய சந்தைகளிலும் வெங்காயத்தின் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் குறித்த சந்தைகளில் தற்போது ஒரு கிலோ வெங்காயம்- 70 ரூபாவாகத் தம்மிடமிருந்து வியாபாரிகளால் கொள்வனவு செய்யப்படுவதாகவும், தென்னிலங்கையிலுள்ள  தம்புள்ள பொதுச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயம் ஒரு கிலோ- 70 ரூபா முதல் 80 ரூபா வரை கொள்வனவு செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் வெங்காயத்தின் விலை குறைவடைந்துள்ளமையால் தாம் நட்டமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

570fb44b-69f5-4ab1-9b43-63431701da25

143d89f0-a41e-46c5-8c2f-f64f843e55a1

Related posts:

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 84 ஆயிரத்து 90 ஆக உயர்வு!
முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 11 வியாபாரிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சட்...
பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது அவசியம் - வடக்கு மாகாண ஆளுநர் ...