வற் வரி திருத்த விவாதம் இன்று இடம்பெறாது!

Wednesday, July 20th, 2016

வற் வரியின் திருத்தச் சட்ட மூலம் இன்று (20) நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது என நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.

நாளை (21) இடம்பெறவுள்ள கட்சி தலைவர்களின் சந்திப்பின் பின்னர் விவாதம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வற் வரி திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் வற் வரிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால்  இது தொடர்பான விவாதத்தை நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இன்றைய தினம் விளையாட்டு ஒழுங்கு சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: