‘வற்’ வரிச்சட்டமூலத்திற்கு எதிராக மேலும் 3 மனுக்கள்!

Friday, October 21st, 2016

மேலும் மூன்று மனுக்கள் பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கான பிரதிகள் தனக்குக் கிடைத்திருப்பதாக, சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்றத்தில், நேற்று(20) அறிவித்துள்ளார்.

சபாநாயகர் கருஜயசூரியவின் அறிவிப்பின் போதே, இவ்விடயத்தை நாடாளுமன்றில் தெரிவித்த அவர், தனது அறிவிப்பில் மேலும் கூறியதாவது,

“அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் கீழ், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பெறுமதிசேர் வரித் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதற்கான பிரதி எனக்குக் கிடைத்திருப்பதாக, 07.10.2016 அன்று சபைக்கு அறிவித்தேன்.

தற்போது, இந்த பெறுமதி சேர் வரிச் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுக்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கான பிரதிகள் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்திருந்தார்.

karu-1-415x260

Related posts: