வற்றாப்பளை கண்ணகி அம்மன் வருடாந்தப் பொங்கல் விழாவையொட்டி விசேட பேருந்து சேவைகள்: யாழ்.சாலை முகாமையாளர்

பிரசித்தி பெற்ற முல்லைத் தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் விழாவையொட்டி நாளை 22,23,24 ஆம் திகதிகளில் யாழ். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கண்ணகி அம்மன் ஆலயம் வரை விசேட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளன.
கிராமப் புறப் பகுதிகளிலிருந்து வற்றாப்பளை செல்லும் அடியவர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து இலங்கை போக்குவரத்துச் சாலைகளில் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அவர்களது இடத்திற்குச் சென்று அவர்களை வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் அவர்களை உரிய இடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.சாலை முகாமையாளர் செ – குலபாலசெல்வம் தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவரின் முழுக் குடும்பத்தினருக்கும் கொரோனா!
வர்த்தமானி அறிவிப்புகளுக்கு அமைச்சரவை அனுமதி!
தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்வதற்காக அயராது உழைக்கும் அனைத்து ஊடக ஊடகவியலாளர்களுக்கு பிரதமர் மஹிந்...
|
|